கோவை: டிவிட்டர் ட்ரெண்டிங்கில் '#GoBackModi' என்ற ஹேஷ்டேக் முதலிடம் பெற்றுள்ளது.
கோவை: டிவிட்டர் ட்ரெண்டிங்கில் '#GoBackModi' என்ற ஹேஷ்டேக் முதலிடம் பெற்றுள்ளது.
பிரதமரின் தமிழக வருகையைக் கண்டித்து மாநிலம் முழுக்க பல்வேறு அமைப்புகள் கருப்புக் கொடி ஏந்தியும், கருப்பு பலூன் பறக்கவிட்டும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். சென்னை விமான நிலையத்தை முற்றுகையிட்டு பல்வேறு அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நெட்டிசன்களும் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து டுவீட்டி வருகின்றனர். டிவிட்டரில் '#GoBackModi' என்ற வாசகத்துடன் பிரதமரின் வருகைக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதனால், சமூக வலைத்தளங்களில் #GoBackModi இந்திய அளவில் டிவிட்டர் ட்ரெண்டிங்கில் முதல் இடம் பிடித்துள்ளது.