கோவை : இந்திய எல்லையில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் சண்டையிட்டு வீர மரணமடைந்த இராணுவ வீரர் கண்ணாளன் கென்னடிக்கு 25-ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி கிராம மக்கள் மற்றும் இந்திய ராணுவத்தினர் சார்பில் நடத்தப்பட்டது.

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கோவனூர் என்ற மலையடிவார கிராமத்தை சேர்ந்தவர் கண்ணாளன் கென்னடி. இவர் கடந்த 1985-ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். பின்னர், 1993-ம் ஆண்டு இதே நாளில் இந்திய எல்லையான காஷ்மீர் மாநிலம் சம்சாபாரி என்னுமிடத்தில் இரவு நேரக் காவல் பணியில் இருந்த கென்னடிக்கு, இந்தியாவிற்குள் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் நுழைய முயன்று வருவது குறித்து தகவல் வந்துள்ளது.
இதனையடுத்து, ராணுவத்தில் நாயக் பொறுப்பில் இருந்த கென்னடி தலைமையில் இராணுவக் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று தீவிரவாதிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.
அதில், நான்கு தீவிரவாதிகளை தனியாளாக விரட்டிச் சென்று சுட்டுக்கொன்ற கென்னடி, மீதமுள்ளவர்களை கடும் இருளில் விரட்டிச் சென்ற போது அவரது இரு கால்களும் பனி குழிக்குள் சிக்கிக் கொண்டது. கால்களை நகர்த்த இயலாமல் கென்னடி தவிப்பதை கண்ட தீவிரவாதிகளில் சிலர் திரும்பி வந்து, இடுப்புவரை பனிக் குழிக்குள் சிக்கிக் கொண்ட கென்னடியை சூழ்ந்து கொண்டு அவரை சுட்டுக்கொன்றனர்.
பனிக் குழிக்குள் சிக்கிக் கொண்டாலும் இறுதிவரை தனது துப்பாக்கி தாக்குதலை கென்னடி நிறுத்தவில்லை. இதன் பின்னர் பிற ராணுவ வீரர்கள் வந்து தீவிரவாதிகளின் மீது தாக்குதல் நடத்தி விரட்டியுள்ளனர். இந்த துணிகர தாக்குதலில் கென்னடி சுட்டுக்கொன்ற நான்கு தீவிரவாதிகள் உள்ளிட்ட பத்து பேர் கொல்லப்பட்டதோடு கென்னடியும் உயிரிழந்தார்.
இதனையடுத்து, கென்னடியின் தியாகத்தையும் வீரத்தையும் போற்றும் வகையில் இறந்த பின் ராணுவத்தினருக்கு வழங்கப்படும் உயரிய விருதான கீர்த்தி சக்ரா விருது, இந்திய ஜனாதிபதியால் வழங்கிக் கவுரவிக்கப்பட்டது.
மேலும், அவரது சொந்த ஊரான கோவனூர் கிராமத்தில் அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் அவர் இறந்த நாளில் ஊர் மக்கள் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று கென்னடியின் 25 ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி கோவனூர் கிராம மக்கள் மற்றும் இந்திய ராணுவத்தின் சார்பில் நடத்தப்பட்டது. ராணுவ அணிவகுப்பு நடத்தி அவரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், கென்னடியின் வீரத்தையும் தியாகத்தையும் செப்புத் தகட்டில் செதுக்கி அதனை அவரது நினைவிடத்தின் அடிப் பகுதில் புதைத்தனர். எத்தனை ஆண்டுகள் ஆனாலும், அவரது வீர வரலாறு மறைந்து விடக்கூடாது என்பதற்காக இந்த செப்புத் தகடு புதைக்கப்பட்டுள்ளதாக கூறிய ஊர் மக்கள், "நாட்டுக்காக வீர மரணமடைந்து, எங்கள் ஊருக்கு பெருமை சேர்த்த கென்னடியின் நினைவை என்றும் மறவோம்." என்றனர்.