கோவை வீல் சேர் கூடைப்பந்து அணிக்காக மினி மாரத்தான்

சிற்றுளி அறக்கட்டளை சார்பில் கோவை வீல் சேர் கூடைப்பந்து அணி தொடங்கப்பட்டது. இந்த அணிக்கான நிதி திரட்டுவதற்கு மினி மாரத்தான் போட்டி வரும் மே மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது.


கோவை: சிற்றுளி அறக்கட்டளை சார்பில் கோவை வீல் சேர் கூடைப்பந்து அணி தொடங்கப்பட்டது. இந்த அணிக்கான நிதி திரட்டுவதற்கு மினி மாரத்தான் போட்டி வரும் மே மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது. 



கே.ஜி. கல்லூரி மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்த மாரத்தான் போட்டிக்காக முன்பதிவு வரும் 20-ம் தேதி வரை நடை பெறுகிறது.



இது குறித்து சிற்றுளி அமைப்பின் நிறுவனர் குணசேகரன் கூறுகையில், "மாற்றுத் திறனாளிகளுக்கான நிதியைத் திரட்டும் நோக்கில் இந்த மாரத்தான் நடைபெற உள்ளது. அந்த அணியில் 18 பேர் உள்ளனர். அவர்கள் சாதாரண வில் சேரை பயன்படுத்தியே பயிற்சி பெற்று வருகின்றனர். ஆனால், விளையாடுவதற்கு உகந்த வீல் சேர் வாங்குவதற்கு ரூ.60 ஆயிரம் வரை செலவாகிறது. அதற்காகவே இந்த போட்டி நடத்தப்படுகிறது.  



இந்த மாரத்தான் போட்டி ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு என மூன்று  பிரிவாக நடத்தப்படுகிறது. இந்த மாரத்தான் போட்டியில் கலந்து கொள்வதற்கான முன்பதிவை www.sittruli.org  என்ற இணையதள முகவரியின் வாயிலாகவும், சென்னை மொபைல்ஸ் கடைகளிலும் செய்து கொள்ளலாம்." என்றார்.    

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...