திருப்பூர்: நீதிமன்றத்திற்குள் முறை தவறி நடந்து கொண்ட காவலர்களைக் கண்டித்து திருப்பூர் மாவட்ட வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவையில் கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் மூன்று பேர் சரணடைந்த நிலையில் மேலும் ஒரு குற்றவாளியான சந்தோஷ் என்ற வாலிபர் சரணடைய திருப்பூர் முதலாவது நீதிமன்றத்திற்கு நேற்று வந்தார்.
அப்போது, நீதிமன்ற வளாகத்தில் கோவை சிங்காநல்லூர் காவல் ஆய்வாளர் முனிஸ்வரன் உள்ளிட்ட நான்கு காவலர்கள் அந்த வாலிபரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று வாகனத்தில் ஏற்றிச்செல்ல முற்பட்டனர்.
இதனைக் கண்ட வழக்கறிஞர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் நீதிபதியிடம் முறையிட்டனர். இந்த நிலையில், நீதிமன்றத்தில் அத்துமீறி நடந்து கொள்ளும் காவல் துறையினரை கண்டித்து இன்று 700-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், அத்துமீறி நடந்து கொண்ட சிங்காநல்லூர் காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.