திருப்பூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட போட்டோ கிராப்பர்ஸ் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

திருப்பூர் குமரன் சிலை அருகே காவிரி மேலாண்மை வாரியத்தை அமுல் படுத்த. வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட போட்டோ கிராப்பர்ஸ் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை நடைபெறும் இந்த போராட்டத்தை விவசாயங்களின் கூட்டமைப்பை சேர்ந்த நல்லுசாமி தொடங்கி வைத்தார்.
இதில் போட்டோ கிராப்பர்ஸ் சங்க தலைவர் வசந்தம் செந்தில், செயலாளர் சூரியன் கார்த்திகேயன், பொருளாளர் ஸ்ரீராம் இளங்கோ மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

காங்கேயம், வெள்ளகோவில், தாராபுரம், உடுமலைப்பேட்டை, அவினாசி மற்றும் பல்லடம் என அனைத்து ஸ்டுடியோ தரப்பினரும் கருப்பு சட்டை அணிந்து உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.