பி.எஸ்.என்.எல் அலுவலகத்தை முற்றுகையிட்ட சமூக நீதிக்கான மக்கள் கூட்டமைப்பினர் கைது

கோவை: எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப் போக செய்யும் உச்சநீதிமன்ற தீர்ப்பை கண்டித்து பி.எஸ்.என்.எல் அலுவலகத்தை முற்றுகையிட்ட சமூக நீதிக்கான மக்கள் கூட்டமைப்பினரை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.

கோவை: எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப் போக செய்யும் உச்சநீதிமன்ற தீர்ப்பை கண்டித்து பி.எஸ்.என்.எல் அலுவலகத்தை முற்றுகையிட்ட சமூக நீதிக்கான மக்கள் கூட்டமைப்பினரை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.

எஸ்.சி. எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப் போக செய்யும் உச்சநீதிமன்றத்தின் சட்ட திருத்தத் தீர்ப்பை கண்டித்து நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. இந்த நிடிலையில், கோவை பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தை சமூக நீதிக்கான மக்கள் கூட்டமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது, மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இது குறித்து தகவலறிந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ய முயன்றபோது இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.



இதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டுகட்டாக தூக்கி சென்று போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி, ஆதித்தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சமூக நீதிக்கான மக்கள் கூட்டமைப்பினர் பி.எஸ்.என்.எல்., அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய போது, பி.எஸ்.என்.எல். அலுவலக வளாகத்திற்குள் ஊழியர்களும் இச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இந்தப் போராட்டம் காரணமாக சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...