இமாச்சலில் பள்ளத்தில் பள்ளிப் பேருந்து கவிழ்ந்து விபத்து : 26 குழந்தைகள் பலி

இமாச்சல் பிரதேசம் : இமாச்சல் பிரதேசத்தில் பள்ளி குழந்தைகள் சென்ற பள்ளி பேருந்து, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 26 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இமாச்சல் பிரதேசம் : இமாச்சல் பிரதேசத்தில் பள்ளி குழந்தைகள் சென்ற பள்ளி பேருந்து, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 26 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 

காங்காரா மாவட்டத்திலுள்ள நார்பூர் பகுதியில் பள்ளி குழந்தைகள் சென்ற பேருந்து மலையிலிருந்த பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் 26 குழந்தைகள் பலியாகினர். பலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பேருந்துக்குள் மாணவர்கள் பலர் சிக்கியுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்தில் அதிகளவில் குழந்தைகள் ஏற்றப்பட்டதாக தெரிய வருகிறது. 

காங்காரா விபத்தில் 26 குழந்தைகள் பலியானதை அம்மாநில அமைச்சர் சுரேஷ் பரத்வாஜ் உறுதி செய்துள்ளார். மேலும், மீட்புப் பணிகள் துரிதமாக நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...