கோவை: இடபற்றாக்குறை உள்ள நிலையில் புதிய கடைகள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் உக்கடம் லாரிப்பேட்டை பகுதியில் உள்ள பழக்கமிஷன் மண்டி உரிமையாளர்கள் மனு அளித்தனர்.
கோவை: இடபற்றாக்குறை உள்ள நிலையில் புதிய கடைகள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் உக்கடம் லாரிப்பேட்டை பகுதியில் உள்ள பழக்கமிஷன் மண்டி உரிமையாளர்கள் மனு அளித்தனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு நாளான இன்று உக்கடம் லாரிப்பேட்டை பகுதியில் உள்ள பழக்கமிஷன் மண்டி உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:- கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக லாரி புக்கிங் ஏஜெண்ட் அலுவலகம், பஞ்சர் கடை ஒர்க்ஷாப் என பல்வேறு தொழில்கள் செய்து வருகிறோம். 1976-ம் ஆண்டு தங்களுக்கு மாநகராட்சி இடம் ஒதுக்கிய போது 120 கடைகள் இருந்தன. தற்போது, 220 கடைகளுக்கு மேல் அதிகரித்து 1,500-க்கும் மேற்பட்டோர் தொழில் செய்து வருகின்றனர்.
லாரிப்பேட்டைக்கு ஒதுக்கப்பட்ட இடத்தைப் பழைய மார்கெட்டுக்கு கொடுத்ததின் காரணமாக இடபற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், புதிய கடைகள் அமைக்க அனுமதிக்கக் கூடாது.

உக்கடம் பகுதியில் இயங்கி வரும் பழக் கமிஷன் மண்டி வியாபாரிகளுக்கு லாரிப் பேட்டையில் இடம் ஒதுக்க மாநகராட்சி நிர்வாகம் முயற்சிகள் மேற்கொள்கின்றனர். கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா ஆகிய பகுதிகளில் இருந்து தினந்தோறும் பழங்கள் கோவைக்கு வருகின்றன. மேலும், செட்டிபாளையம் பகுதியில் 25 ஏக்கரில் இடம் ஒதுக்கியுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் கூறியுள்ளது. அதில், அனைத்து வசதிகள் செய்து தர வேண்டும். இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.