கோவை: நீட் தேர்வில் விலக்கு பெற சட்டரீதியாக தமிழக அரசு போராடி வந்தாலும், நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகப் பயிற்சி முகாம் தொடங்கப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார்.

தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவ, மாணவியர்களுக்கு மருத்துவப் படிப்பில் சேர தேசிய நுழைவுத் தேர்வான 'நீட்' தேர்வுக்கு ஆயுத்தப்படுத்தும் உண்டு, உறைவிட பயிற்சி முகாம் இன்று கோவையில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனத்தில் தொடங்கியது. 21 நாட்கள் நடக்கும் இப்பயிற்சி முகாமில் மாணவ, மாணவிகள் அங்கேயே தங்கி படிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பயிற்சி முகாமிற்கு, கோவை, நீலகிரி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர் மற்றும் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவ, மாணவியர்கள் சுமார் 350 பேர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியின் தொடக்க விழாவாகத் தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, மாணவர்களுக்கு மடிக்கணினி மற்றும் பயிற்சி புத்தகங்களை வழங்கி தொடங்கி வைத்தார். பின்னர், அவர் பேசுகையில், "நீட் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும் என சட்டரீதியாக தமிழக அரசு போராடி வந்தாலும், தற்போது நீட் தேர்வில் மாணவர்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காகவும், அச்சமின்றி போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள இந்த பயிற்சி முகாம் தொடக்கப்பட்டுள்ளது. கல்வியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. மடிக்கணினி வழங்கும் திட்டம் தொடர்ந்து தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது," என்றார்.
இத்தொடக்க விழாவில் கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பேசுகையில், "இப்பயிற்சி முகாமில் மாணவர்களுக்கு போட்டித் தேர்வுக்கான பயிற்சியை வழங்க பெங்களூரில் இருந்து சிறப்பு ஆசிரியர்கள் வந்துள்ளனர். மாணவர்கள் இப்பயிற்சியில் சிறப்பாக செயல்பட்டு நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டும்," எனக் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே. செல்வராஜ் மாணவர்களிடம் பேசியதாவது :- நீட் தேர்வால் மாணவர்களுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது. சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்திலிருத்து கேள்விகள் கேட்கப்படுவதால் தமிழக மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். நாடாளுமன்றத்தில் முறையிட்டும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியவில்லை. இது தொடர்பாக மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. சமச்சீர் கல்விமுறையால் தான் பாதிப்பு. பாடத்திட்டத்தை மாற்றியமைக்க முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போராடினார். தற்போது, மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகதான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த உண்டு உறைவிட பயிற்சி முகாமினை ஏற்பாடு செய்துள்ளார். இதனை மாணவர்கள் உபயோகப்படுத்தி வெற்றி பெறுவார்கள் என நம்பிக்கை உள்ளது. இவ்வாறு பேசினார்.