கோவை: பாரத் கலா ஆராதனா அமைப்பின் சார்பில் 'கேரளக் கலைகள்' (Essence of Kerala) எனும் தலைப்பில் கலை நிகழ்ச்சி, கிக்கானி பள்ளியில் உள்ள சரோஜினி நடராஜ் அரங்கில் இன்று மாலை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கேரள மாநிலத்தின் பாரம்பரிய, நாட்டுப்புற கலைகளான மோகினி ஆட்டம், மயூர நிருத்தம், கைகொட்டிக் களி, செண்டை மேளம் போன்ற பல்வேறு நடனங்கள் அரேங்கேற்றப்பட்டன. அத்தோடு, நடணக் கலைகள் பற்றிய வரலாறும், நடனத்தின் நுணுக்கமான அசைவுகள் பற்றிய தகவல்களும் விளக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் சி.ஜி.எஸ். மணியன் பேசுகையில், "பறந்து விரிந்த பாரததேசம் கலைகளின் கூடம். ஒவ்வொரு மாநிலமும் தனக்கான பாரம்பரிய, கிராமிய கலைகளை தனக்கே உரிய தனித்துவத்தோடு கொண்டுள்ளது. சில கலை வடிவங்கள் அழியும் தருவாயிலும் உள்ளன. அழியும் தருவாயில் உள்ள கலை வடிவங்களுக்குப் புத்துணர்ச்சி அளிப்பதும், இருக்கும் கலைகளை ஆராதிப்பதும் தான் இந்நிகழ்வின் அடிப்படைநோக்கம்.

இந்த முயற்சிக்கு வடிவம்கொடுக்கும் வகையிலும், அந்தந்த மாநிலத்தின் கலை வடிவங்கள், அதன் தனித்துவம், பாரம்பரியம் பற்றி கோவை மக்கள் அறிந்துகொள்ளும் வகையிலும் "பாரத் கலா ஆராதனா" மூன்று மாதத்திற்கு ஒருமுறை நிகழ்வுகள் நடத்தி வருகிறது. ஒவ்வொரு நிகழ்வும், ஒரு மாநிலம் சார்ந்த கலைகளைப் போற்றி பூசிக்கும் விதமாக அமையும்" என்றார்.

கடந்த ஜனவரி மாதம், தமிழகத்தின் கலைகள் என்ற தலைப்பில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், அடுத்த நிகழ்வாக கர்நாடக மாநிலத்தின் பாரம்பரிய நடனக் கலை நிகழ்ச்சி நடைபெறவிருப்பதாக 'பாரத் கலா ஆராதனா' அமைப்பினர் தெரிவித்தனர்.