கோடை சீசனையொட்டி தேயிலை பூங்காவை பிரபலப்படுத்துமா தோட்டக்கலைத்துறை

நீலகிரி: தொட்டபெட்டா சிகரம் அருகே உள்ள தேயிலை பூங்காவை பிரபலப்படுத்தும் வகையில் கோடை நிகழ்ச்சிகளை நடத்த தோட்டக்கலைத்துறை முன் வருமா என உள்ளூர் மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை எழுந்துள்ளது.

நீலகிரி: தொட்டபெட்டா சிகரம் அருகே உள்ள தேயிலை பூங்காவை பிரபலப்படுத்தும் வகையில் கோடை நிகழ்ச்சிகளை நடத்த தோட்டக்கலைத்துறை முன் வருமா என உள்ளூர் மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை எழுந்துள்ளது.



நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள உதகை அரசு தாவரவியல், ரோஜா பூங்கா, குன்னூர் சிம்ஸ்பூங்கா, காட்டேரி பூங்கா ஆகியவை சுற்றுலா பயணிகளின் உள்ளத்தைக் கவர்ந்த சுற்றுலா தலங்களாக மாறியுள்ளது. இந்நிலையில் தோட்டக்கலைத்துறையின ஐந்தாவது பூங்காவாக, தொட்டபெட்டா மலை சிகரம் அருகே 10 ஏக்கர் பரப்பளவில், சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட நிதியின் கீழ் ரூ. 79 லட்சம் மதிப்பில் தேயிலை பூங்கா கடந்த 2015-ம் ஆண்டு ஜீன் மாதம் சுற்றுலா பயணிகளுக்காகத் திறக்கப்பட்டது.



இப்பூங்காவில் உள்ள தேயிலை தோட்டங்களின் இடையே நடைப்பயணம் செய்வதன் மூலம், ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள தேயிலையின் வரலாறு குறிப்புகள், மருத்துவ குணங்கள், தேநீர் தயாரிப்பு முறை குறித்த விவரங்கள் தெரிந்து கொள்ள முடியும். மேலும், சிறுவர்கள் விளையாடி மகிழ விளையாட்டு உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன. மலர் படுகை, புல்வெளிகளின் மத்தியில் அமைக்கப்பட்டுள்ள பார்வையாளர் மாடத்தில் இருந்து, மலைகள், மரங்கள் சூழ்ந்த பள்ளத்தாக்கு காட்சிகளை கண்டு ரசிக்க முடியும்.



இந்நிலையில், இந்தப் பூங்கா குறித்து சுற்றுலா பயணிகள் இடையே போதிய பிரபலம் இல்லாத நிலை மற்றும் தேயிலைக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், கோடை சீசன் சமயங்களில் தேயிலை குறித்த நிகழ்ச்சிகளை நடத்தினால், இந்த தேயிலை பூங்கா பிரபலமாவதுடன், தேயிலை தொழிலையும் மேம்படுத்த முடியும் என்பது உள்ளூர் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும், இந்தப் பூங்காவில் தேயிலை சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்த தோட்டக் கலைத்துறை முன் வருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...