கோவை: சசிக்குமார் கொலை வழக்கு குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரில், இருவர் மீது சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்து முன்னணி அமைப்பின் கோவை மாவட்ட செய்தித் தொடர்பாளராக இருந்தவர் சசிகுமார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதியன்று நான்கு பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை துடியலூர் போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீசாருக்கு மாற்றப்பட்டது.
வழக்கு தொடர்பாக முபாரக், அபுதாகிர், சதாம் உசேன், சுபேர் என்ற நான்கு பேரை சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது செய்தனர். இந்த கொலையில் அமைப்பு ரீதியான பின்னணி இருக்க வாய்ப்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு கடந்த ஜனவரி மாதம் வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீசாரிடம் இருந்து தேசிய புலனாய்வு முகமைக்கு (NIA) மாற்றப்பட்டது.
வீடுகளில் சோதனை
இந்நிலையில், தேசிய புலனாய்வு துறை, சசிகுமார் கொலை வழக்கில் பல்வேறு விசாரணைகளை நடத்தினர். இதில் கைது செய்யப்பட்ட முபாரக், அபுதாகிர், சதாம் உசேன், சுபேர் ஆகியோரின் வீடுகளில் தேசிய புலனாய்வு துறையினர் சோதனை நடத்தினர். இதில் அபுதாகிர், சுபேர் ஆகியோரின் இல்லங்களில் மூன்று செல் போன்கள் மற்றும் ஒரு இரு சக்கர வாகனத்தை தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த சோதனையானது சாய்பாபா காலனி, உக்கடம் ஆகிய பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.
குற்றப்பத்திரிகை
என்.ஐ.ஏ. இன்று சுபேர் மற்றும் சதாம் உசைன் ஆகியோர் மீது பூந்தமல்லி சிறப்பு நீதி மன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில், வீடுகளில் சோதனை செய்ததில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது .இருவரும் பாபுலர் பிரண்ட் ஆப் இந்திய அமைப்பில் தீவிரமாக செயல்பட்டு வந்ததாகவும், அவர்கள் இருவரும் இணைந்து, தீவிரவாதத்தை நிகழ்த்தும் நோக்கத்தோடு செயல்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இஸ்லாமியர் அல்லாதோர் அல்லது இஸ்லாத் மீது நம்பிக்கை இல்லாதோர் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளனர்.