கோவை விமான நிலைய விரிவாக்கம்: தென்னை மரத்திற்கு தலா ரூ.50,000 இழப்பீடு கோரும் விவசாயிகள்

கோவை: கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காக வெட்டப்படும் தென்னை மரம் ஒன்றிற்கு ரூ. 50,000 இழப்பீடு வழங்க வேண்டும் என தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை: கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காக வெட்டப்படும் தென்னை மரம் ஒன்றிற்கு ரூ. 50,000 இழப்பீடு வழங்க வேண்டும் என தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பீளமேட்டை அடுத்த சித்ராவில் உள்ள கோவை சர்வேதச விமான நிலையத்தை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய மத்திய, மாநில அரசுகள் ஒப்புதல் அளித்தன. இதையடுத்து, விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக அருகில் உள்ள சின்னியம்பாளையம், நீலம்பூர், இருகூர் போன்ற பகுதிகள் தேர்வு செய்யப்பட்டன. அப்பகுதிகளில் தேர்வு செய்யப்பட்ட இடங்களை அரசு எடுத்துக்கொள்ளும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஆக்கிரமிக்கப்படும் பகுதிகளில் உள்ள நிலங்களுக்கு சதுரஅடிக்கு ரூ. 1,500-யும், விவசாய நிலங்களுக்கு சதுர அடிக்கு ரூ. 900-யும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், ஒருசிலர் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்ய ஒப்புதல் கடிதம் கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில், கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்காக வெட்டப்படும் தென்னை மரம் ஒன்றிற்கு ரூ. 50,000 இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரனிடம் தமிழ்நாடு விவசாயிகள் கூட்டமைப்பினர் மனு அளித்தனர். அந்த மனுவில், கூறியிருப்பதாவது, இந்தப் பகுதிகளில் 18 முதல் 25 ஆண்டுகள் விளைச்சல் கொடுத்த தென்னை மரங்களே உள்ளன. ஆண்டுக்கு 200 தென்னை மரங்கள் விளைகின்றன. மேலும், மாசு மற்றும் பூச்சிக் கொல்லிகளில் இல்லாத மண் மற்றும் நிலத்தடி நீர் உள்ளது. குறிப்பாக, இந்தத் தென்னை மரங்கள் அகற்றப்படுவதால், நீரா பானம் முற்றிலும் பாதிக்கப்படுகிறது. எனவே, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, விமான நிலைய விரிவாக்கத்திற்காக அகற்றப்படும் தென்னை மரங்களுக்கு அதிகபட்ச இழப்பீடு வழங்க வேண்டும், இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இருகூர், காளப்பட்டி உள்ளிட்ட விமான நிலைய விரிவாக்கத்திற்குட்படுத்தப்படும் பகுதிகளில் சுமார் 3,000 தென்னை மரங்கள் இருக்கின்றன. எனவே, இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் வரும் செவ்வாய்கிழமை விவசாயிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...