காமன்வெல்த் போட்டியில் ஆடவர் பளு தூக்குதலில் தமிழகத்தை சேர்ந்த சதீஷ்குமார் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதன்மூலம், பளு தூக்குதலில் இந்தியாவிற்கு 3வது தங்கம் கிடைத்துள்ளது
காமன்வெல்த் போட்டியில் ஆடவர் பளு தூக்குதலில் தமிழகத்தை சேர்ந்த சதீஷ்குமார் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதன்மூலம், பளு தூக்குதலில் இந்தியாவிற்கு 3வது தங்கம் கிடைத்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்டில் காமன்வெல்த் போட்டிகள் நடந்து வருகிறது. இதில், ஆடவர் பளுதூக்குதல் போட்டியில் 77 கிலோ எடை பிரிவில் தமிழக வீரர் சதீஷ் குமார் கலந்து கொண்டார். மொத்தம் 317 கிலோ எடையை தூக்கி இந்தப் போட்டியில் தங்கத்திற்கான மகுடத்தை சூடினார்.
முன்னதாக, மகளிருக்கான பளுதூக்குதலில் 48 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் சிகோம் மிராபாய் சானு, 53 கிலோ எடை பிரிவில் சஞ்சிதா சானு தங்கம் வென்றனர். சதீஷ் குமார் தங்கம் வென்றதன் மூலம் இந்தியா, பளுதூக்குதல் போட்டியில் 3-வது தங்கம் வென்றது. இதனையடுத்து, பதக்கப்பட்டியில் 3 தங்கம் ஒரு வெள்ளி ,ஒரு வெண்கல பதக்கங்களுடன் இந்தியா 3-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.
பதக்கம் வென்ற சதீஷ்குமார் வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியை சேர்ந்தவராவார். பதக்கம் வென்றது குறித்து அவரது பெற்றோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இவர் கடந்த 2014 ம்ஆண்டு ஸ்காட்லாந்து நாட்டில் நடந்த காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.