கூட்டுறவு சங்கத் தேர்தலை முறையாக நடத்தாத தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகையில் கூட்டுறவு சங்கங்களின் தேர்தலை முறையாக நடத்தாத தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகையில் கூட்டுறவு சங்கங்களின் தேர்தலை முறையாக நடத்தாத தேர்தல் ஆணையத்தைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

உதகையில் கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் பணியாளர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். கூட்டுறவு சங்கத் தேர்தல் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பணியாற்றிய ஊழியர்களை ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் பணியை செய்ய விடாமலும், மிரட்டியும் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர். 

இதனையடுத்து, தேர்தலின் போது சில இடங்களில் ஊழியர்களை தாக்கியதாகக் கூறப்படுகிறது. எனவே, இதுபோன்ற அரசு பொதுவேலைகளில் பணியாற்றும் போது தங்களுக்கான பாதுகாப்பை அரசு ஏற்படுத்த வேண்டும், தேர்தல் நடக்கும் போது முறையான வகையில், பாதுகாப்பாக தேர்தலை நடத்த வேண்டுமென தேர்தல் ஆணையத்திற்கு கூட்டுறவு சங்கங்களின் பணியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்தப் போராட்டத்தில் பல்வேறு கிராமங்களில் பணியாற்றும் ஊழியர்கள் கோஷங்களை எழுப்பி தங்களது கண்டனத்தைப் பதிவு செய்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...