கோவையில் வரும் ஞாயிற்றுக்கிழமை மழை பெய்ய வாய்ப்புள்ளது : வேளாண் பல்கலைக்கழகம்

கோவை: கோவையில் அடுத்த 3 நாட்களுக்கு வானம் அவ்வப்போது மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், வரும் ஞாயிற்றுக்கிழமை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகம் அறிவித்துள்ளது.

கோவை : கோவையில் அடுத்த 3 நாட்களுக்கு வானம் அவ்வப்போது மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், வரும் ஞாயிற்றுக்கிழமை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகம் அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர் செல்வம் கூறுகையில், " கோவை, நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் சனிக்கிழமை மதியத்திற்கு மேல் அல்லது ஞாயிற்றுக்கிழமை மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோவையைப் பொறுத்தவரை அடுத்த மூன்று நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகரிக்காதவாறு அவ்வப்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். 

காலை நேரம் வெப்பநிலையைப் பொறுத்தவரையில் 34.5 டிகிரி செல்சியஸ் முதல் 36 வரை அதிகபட்சம் பதிவாகக்கூடும். இரவு நேரத்தில் 24.5 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளது. அதே சமயம், காற்றின் வேகம் 8 கி.மீ. முதல் 10 கீ.மீ. வரை வீசக்கூடும்," என்றார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...