கோவை: பாரதியார் பல்கலைக்கழகத்தின் சார்பில் கோவை மாவட்டம் ஆனைமலை பகுதியில் புற்றுநோய் விழப்புணர்வு முகாம் மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது.

பாரதியார் பல்கலைக்கழகத்தின் மனித மரபியல் மற்றும் மூலக்கூறு உயிரியல் துறையின் மூலக்கூறு மரபியல் மற்றும் புற்றுநோய் உயிரியல் ஆய்வகத்தைச் சார்ந்த இரா. சிவசாமி மற்றும் அவரது ஆராய்ச்சி மாணவர்கள் புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது.

இதில், புற்றுநோயின் காரணிகள், அவற்றை தடுக்கும் முறைகள், தவிர்க்கப்பட வேண்டிய பழக்க வழக்கங்கள் மற்றும் உணவுகள், சுற்றுச்சூழலின் பாதிப்பினால் ஏற்படும் புற்றுநோய்கள், அவற்றிலிருந்து தம்மை பாதுகாக்கும் முறைகள் ஆகியவை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த முகாமில், பொள்ளாச்சி தாலுகா, ஆனைமலை பிளாக், காளியாபுரம் கிராமத்தைச் சார்ந்த நரிக்கல்பதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.