முதலமைச்சரிடம் 7-வது முறையாக பதக்கம் வாங்கிய கோவை மாநகர ஆணையருக்கு குவியும் பாராட்டு

கோவை: தமிழ்நாடு காவல்துறை சார்பில் சென்னையில் நடைபெற்ற நிறைவு அணிவகுப்பு விழாவில் தமிழக முதலமைச்சரிடமிருந்து 7வது முறையாக பதக்கங்கள் வாங்கிய கோவை மாநகர காவல் ஆணையாளர் பெரியய்யா அவர்களுக்கு கோவை மக்களிடமிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.


கோவை: தமிழ்நாடு காவல்துறை சார்பில் சென்னையில் நடைபெற்ற நிறைவு அணிவகுப்பு விழாவில் தமிழக முதலமைச்சரிடமிருந்து 7வது முறையாக பதக்கங்கள் வாங்கிய கோவை மாநகர காவல் ஆணையாளர் பெரியய்யா அவர்களுக்கு கோவை மக்களிடமிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

கடந்த நான்காம் தேதி சென்னையில் தமிழ்நாடு காவல்துறை சார்பில் நடைபெற்ற நிறைவு அணிவகுப்பு விழாவில் இந்திய குடியரசு தலைவர், மத்திய உள் துறை அமைச்சகம் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் விழாவில் தமிழக முதலமைச்சர் காவல்துறை அதிகாரிகளுக்கு பதக்கங்கள் வழங்கினார். இதில் தமிழக முதல்வர்களிடமிருந்தும் மத்திய அரசுகளிடமிருந்தும் பெரியய்யா அவர்கள் சிறப்பாக பணியாற்றியதற்காக இதுவரை ஆறு பதக்கங்களை பெற்றுள்ளார். தற்போது மீண்டும் தமிழக முதல்வரிடமிருந்து திறம்பட செயல்பட்டதற்காக 7வது முறையாக பதக்கங்களை பெற்றுள்ளார். ஏற்கனவே கோவையில் மேட்டுப்பாளையம் சாலை செல்வதற்காக புரூக்பீல்ட்ஸ் சாலை ஒரு வழி பாதையானதின் சிரமத்தை ஏற்று பொதுமக்களின் குறையை தீர்த்து இரு வழி பாதையாக்கி கோவை மக்களிடம் பாராட்டுகளை பெற்றார்.



இந்த நிலையில் அவருக்கு தமிழக முதல்வரால் வழங்கப்பட்ட இந்த பதக்கத்திற்கு கோவை மக்களும் காவல்துறையினரும் பாராட்டுக்கள் தெரிவித்தவன்னம் உள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...