காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அனைத்து பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூர் : காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட அனைத்து பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் : காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட அனைத்து பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 



காவிரிமேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி திருப்பூரில் குமரன் சிலை முன்பாக ஆர்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக பத்திரிக்கையாளர்கள் அனைவரும் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக மத்திய அரசு அமைக்க வேண்டும் என கோரி கோக்ஷங்களை எழுப்பினர். 

மேலும், இந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட பத்திரிக்கையாளர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்பாட்டத்தில் திருப்பூர் பத்திரிக்கையாளர் சங்க தலைவர் விஜயன், திருப்பூர் பத்திரிக்கையாளர் நலச்சங்க தலைவர் சுப்பிரமணி மற்றும் ராஜ் செய்தியாளர் முரளி, மூத்த பத்திரிக்கையாளர் ஜஹாங்கீர் உள்ளிட்ட ஏராளமான பத்திரிக்கையாளர்கள் கலந்துகொண்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் கண்டன போராட்டங்களை நடத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட மற்றும் தாலுக்கா அணைத்து பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்கள் திருப்பூர் குமரன் நினைவகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...