மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் வெளியில் இருந்து எடுத்து வரப்படும் உணவுகளுக்கு தடை விதிக்கக் கூடாது என மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் வெளியில் இருந்து எடுத்து வரப்படும் உணவுகளுக்கு தடை விதிக்கக் கூடாது என மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
வெளியில் இருந்து கொண்டு வரும் உணவுகளை திரையரங்குக்குள் கொண்டு செல்லக் கூடாது என்ற தடையை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்தத் தடை, மருத்துவ காரணங்களால் வெளியில் விற்கப்படும் உணவை சாப்பிட முடியாத மூத்த குடிமக்களை வெகுவாக பாதிப்பதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டது.
இந்த மனு விசாரணைக்கு வந்த போது, மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் உணவுப் பண்டங்கள் மற்றும் தண்ணீர் ஆகியவை அதிக விலைக்கு விற்கக் கூடாது. அவை சாதாரண கட்டணங்களில் மட்டுமே விற்கப்பட வேண்டும். மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் வெளியில் இருந்து எடுத்து வரப்படும் உணவுகளுக்கு தடை விதிக்கக் கூடாது, என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், இருதரப்பு வாதங்களைக் கேட்டு பரிசீலனை செய்து, 6 வாரங்களுக்குள் இதற்கான கொள்கை வரையறுக்கப்பட்டும் என அரசு தரபிபில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜுன் 12-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.