"சட்டவிரோதமாக மரங்களை வெட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சட்டம் தேவை"

கோவை : உரிய அனுமதியின்றி மரங்களை வெட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையிலான சட்டம் இயற்றப்பட வேண்டும் எனக் கோவையில் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை : உரிய அனுமதியின்றி மரங்களை வெட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையிலான சட்டம் இயற்றப்பட வேண்டும் எனக் கோவையில் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 



உக்கடம் பகுதியை அடுத்த கரும்புக்கடை, சவுகார் நகரில் வசித்து வரும் அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் வார்டு உறுப்பினர் முத்து என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டின் அருகே உள்ள மரத்தை வெட்ட முயற்சித்துள்ளார். ஆனால், ஓசை தொண்டு நிறுவனம் மற்றும் அப்பகுதியினரின் கடும் எதிர்ப்பால் அந்த செயல் கைவிடப்பட்டது. இந்த நிலையில், கட்டுமானப் பணிக்காக 15 ஆண்டுகள் பழமையான போதி மரத்தை வெட்டியுள்ளார். இதையறிந்த ஓசை தொண்டு நிறுவனத்தின்  அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், வருவாய் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த அவர்கள் முன்னாள் வார்டு உறுப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து, 10 மரக்கன்றுகளை நடவு செய்து பராமரிப்பதாக அவர் உறுதியளித்தார். 

"சட்டவிரோதமாக இதுபோன்று மரங்களை வெட்டும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே, உரிய அனுமதியின்றி மரங்களை வெட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையிலான சட்டம் இயற்றப்பட வேண்டும். மனிதர்கள் வாழ்வதற்கு மரங்கள் இன்றியமையாதது என்பதை உணர வேண்டும்", என ஓசை தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த சையத் கூறினார். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...