கோவை : கோவை சர்தார் வல்லபாய் படேல் ஜவுளி கல்லூரியில், மெடிக்கல் டெக்ஸ்டைல்ஸ் பயிற்சி பட்டறை இன்று தொடங்கியது.

சர்தார் வல்லபாய் படேல் ஜவுளி கல்லூரியும், தமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளித் துறையும் இணைந்து ஜவுளி தொழில்நுட்பத் துறைக்கும், ஜவுளி தொழில் முனைவோர்க்கும் உதவ பல்வேறு தொழில்நுட்ப உட்பிரிவுகளில் ஜவுளி பயிற்சி பட்டறைகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடக்கவிழா கடந்த மாதம் 10-ம் தேதி நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக தொழில்நுட்ப ஜவுளித்துறையின் ஒரு உட்பிரிவான மெடிக்கல் டெக்ஸ்டைல்ஸ் பயிற்சி பட்டறை இன்று தொடங்கியது. 8-ம் தேதி வரை நடக்கும் இந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 80 பேர் பங்கேற்றனர்.

பட்டறையின் முதல் நாள் துறைசார் வல்லுநர்களின் விரிவுரைக்காக ஒதுக்கப்பட்டது. மேலும், மெடிக்கல் டெக்ஸ்டைல்ஸ் பயிற்சி பட்டறையில் தயாரிப்பு முறை, தொழில்நுட்பம், இயந்திரங்கள், தரநிலைகள், சந்தைத் தேவைகள், சந்தைப்படுத்துதல் முதலிய தலைப்புகளில் பங்கேற்பாளர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்படும். மேலும், புதிய பொருட்கள் உற்பத்தி, SWOT ஆராய்ச்சி புதிய வியாபாரத்தில் நுழைவதற்கான பயிற்சிகள் வழங்கப்படுகிறது.