மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் முத்துமாரியம்மன் கோவிலின் பிரசாதம் சாப்பிட்டவர்களில் 2 பெண்கள் உடல்நலக்குறைவு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேட்டுப்பாளையத்தில் உள்ள நாடார் காலனி பகுதியில் முத்துமாரியம்மன் கோவிலில் இருதினங்களுக்கு முன்பு பொறிச்சாட்டு விழா நடைபெற்றது. இதில், உள்ளூரைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழாவின் போது, கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அவல் பிரசாதம் வழங்கப்பட்டது. இதனை 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் வாங்கி உண்டனர். அவர்களில் பெரும்பாலானோருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. வாந்தி, வயிற்றுப்போக்கு, மயக்கம் உள்ளிட்ட பிரச்சனைகள் காரணமாகப் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், கோவிலில் வழங்கப்பட்ட அவல் பிரசாதத்தில் கலக்கப்பட்ட நெய் காலாவதியானதால், உணவு ஒவ்வாமை ஏற்பட்டது தெரியவந்தது.
இந்நிலையில், சாவித்திரி (60), லோகநாயகி (62) என்ற இரு பெண் பக்தர்கள் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக உயிரிழந்தனர். கோவிலில் வழங்கப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்ட பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.