கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோவை வழக்கறிஞர்கள் சங்கத்தினர், நீதிமன்றத்தின் எதிரே உள்ள நினைவு தூணில் கருப்பு கொடி ஏற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கவும், மத்திய அரசின் நியூட்ரினோ திட்டம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்ற வளாகத்தின் வெளியில் கோவை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நீதிமன்ற வளாகத்தில் இருந்து கோஷமிட்டபடி சென்று அங்குள்ள நினைவு தூணில், கருப்பு கொடியை கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.