நீலகிரி: கூடலூர் அருகே எழுமரம் பகுதியில் நேற்று இரவு காட்டு யானை தாக்கியதில் விஜகுமார் என்ற கூலி தொழிலாளி பலியானார்.
நீலகிரி: கூடலூர் அருகே எழுமரம் பகுதியில் நேற்று இரவு காட்டு யானை தாக்கியதில் விஜயகுமார் என்ற கூலி தொழிலாளி பலியானார்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள எழுமரம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். கூலி தொழிலாளியான இவர் நேற்று இரவு 10.30 மணியளவில் தனது உறவினரை அவரது வீட்டில் விட்டுவிட்டு, வீடு திரும்பியுள்ளார்.
அப்போது சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த காட்டு யானை விஜயகுமாரை தாக்கியது. இதில் விஜயகுமாருக்கு இடுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அலறல் சத்தம் கேட்ட பொதுமக்கள் அங்கு சென்று பார்த்த போது விஜயகுமார் இறந்து போனது தெரிய வந்தது.
தகவலறிந்து அப்பகுதிக்கு வந்த வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் இறந்தவரின் உடலை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். இந்த சம்பவம் குடியிருப்பு பகுதியில் நடந்ததால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். தற்போது அங்கு முகாமிட்டுள்ள காட்டு யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.