ரஜினி-கமல் படங்களை கர்நாடகத்தில் திரையிட விட மாட்டோம் - வாட்டாள் நாகராஜ்

பெங்களூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஆதரவு தெரிவித்து வரும் ரஜினி-கமல் திரைப்படங்களை கர்நாடகத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று கன்னட சலுவாளி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார்.

பெங்களூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஆதரவு தெரிவித்து வரும் ரஜினி-கமல் திரைப்படங்களை கர்நாடகத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று கன்னட சலுவாளி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார்.

காவிரி விவகாரம் தமிழகத்தில் தலை தூக்கியுள்ளது. ஆளும் கட்சி முதல், எதிர்க் கட்சி, பிற கட்சிகள் மற்றும் அமைப்புகள் வரை அனைத்துத் தரப்பினரும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இன்று தமிழகத்தில் முழு அடைப்புக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து கடைகளை அடைத்துள்ளனர். பெரும்பாலான பேருந்துகள் இயங்கவில்லை.

இந்த நிலையில் ரஜினிகாந்த் மற்றும் கமலஹாசனின் திரைப்படங்களை கர்நாடகத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று கன்னட சலுவாளி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் கூறுகையில், "காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்குமாறு தமிழ்நாடு அரசு வலியுறுத்தி வருவது கண்டிக்கத்தக்கது. எந்த காரணத்தை கொண்டும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக் கூடாது.

இன்று தமிழ்நாட்டில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு பதிலடியாக கர்நாடகத்திலும் முழு அடைப்பு போராட்டம் நடத்துவோம். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை நாங்கள் கண்டிக்கிறோம்.

காவிரி பிரச்சினையில் ரஜினிகாந்த், கமலஹாசன் ஆகியோர் கர்நாடக மாநிலத்திற்கு எதிராகக் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அவர்களின் படங்களை கர்நாடக மாநிலத்தில் திரையிட விட மாட்டோம்." என்றார்.

ரஜினியின் ‘காலா’ படம் வருகிற 27-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அவர் நடித்த ‘2.0’ படமும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படங்கள் கர்நாடகத்தில் வெளியாகுமா? என்பதில் கேள்வி எழுந்துள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...