கோவை: ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது கோவையில் நடைபெற்ற வன்முறை சம்பவம் தொடர்பாக நான்காம் கட்ட விசாரணை வரும் 10-ம் தேதி தொடங்குகிறது.

தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது சட்டம் ஒழுங்கு முழுமையாக பாதிக்கப்பட்டது. அமைதியான முறையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் காவல்துறையினர் தடியடி நடத்தியதே இந்த பிரச்சினைக்கு காரணம் என்று ஒரு சாரர் குற்றம்சாட்டினர். இளைஞர்கள் போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்ததே வன்முறைக்குக் காரணம் என்று சிலர் குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஏற்பட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு யார் காரணம்? என்று விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு கோவையில் பொதுமக்கள் மற்றும் போலீசாரிடம் மூன்று முறை விசாரணை நடத்தியுள்ளது.
இந்த நிலையில், 4-ம் கட்ட விசாரணை வரும் 10-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை அரசு விருந்தினர் மாளிகையில் நடைபெற இருக்கும் இந்த விசாரணையில் பொதுமக்கள் கலந்து கொண்டு சாட்சி அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.