கோவையில் முழு அடைப்பு, சாலை மறியல், போராட்டங்கள்: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிப்பு தெரிவிக்கும் வகையில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் எடுத்த முடிவின்படி, இன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. தி.மு.க. கூட்டணி கட்சிகள் நடத்தும் இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு பா.ம.க., த.மா.கா. உள்ளிட்ட கட்சிகளும், அனைத்து விவசாய அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து இருக்கின்றன.

கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிப்பு தெரிவிக்கும் வகையில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் எடுத்த முடிவின்படி, இன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. தி.மு.க. கூட்டணி கட்சிகள் நடத்தும் இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு பா.ம.க., த.மா.கா. உள்ளிட்ட கட்சிகளும், அனைத்து விவசாய அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து இருக்கின்றன.



கோவையைப் பொறுத்தவரையில் முழுமையாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ளன. இதனால் பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசைக் கண்டித்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தி.மு.க., உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் சாலை மறியல், ரயில் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

இன்று காலை கோவை ரயில் நிலையத்திற்குள் புகுந்த தி.மு.க., ம.தி.மு.க., எஸ்.டி.பி.ஐ., விடுதலைச் சிறுத்தைகள், சி.பி.எம், போன்ற பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தொண்டர்கள் ரயில் தண்டவாளத்தில் இறங்கி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.



மேலும், அவர்கள் லங்கா கார்னர் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் டவுன்ஹால் வழியாக வரும் வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

போலீசாருடன் கடும் வாக்குவாதத்திற்குப் பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைதாகினர்.



இதே போல், பீளமேடு பகுதி அவினாசி சாலையில் இன்று காலை தி.மு.க., காங்கிரஸ்., சி.பி.எம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் எப்போதும் பரப்பாக காணப்படும் அவினாசி சாலை ஸ்தம்பித்தது. சுமார் அரை மணி நேரத்திற்குப் பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.



வால்பாறை: வால்பாறையில் 500-க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன. அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து இயக்க வேண்டிய 43 பேருந்துகளில் 37 பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. அந்த பேருந்துகளை அண்ணா தொழிற்சங்க ஊழியர்கள் இயக்கி வருகின்றனர். 



மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை, காரமடை, பெரியநாயக்கன்பாளையம் போன்ற பகுதிகளில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. சிறு குறு தொழில் நிறுவனங்கள், காய்கறி சந்தை, கைத்தறி உற்பத்தி கூடங்கள் என அனைத்தும் இயங்கவில்லை.

குறைந்த அளவிலான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கோடை விடுமுறை காரணமாக வந்துள்ள சுற்றுலா பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...