கோவையில் இருந்து கர்நாடகத்திற்கு இயக்கப்படும் பேருந்துகள் நிறுத்தம்

கோவை: காவிரி விவகாரத்தில் தமிழகத்தில் இன்று முழு அடைப்பு நடைபெறுவதைத் தொடர்ந்து, கோவையில் இருந்து கர்நாடகத்திற்கு இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன.



கோவை: காவிரி விவகாரத்தில் தமிழகத்தில் இன்று முழு அடைப்பு நடைபெறுவதைத் தொடர்ந்து, கோவையில் இருந்து கர்நாடகத்திற்கு இயக்கப்படும் அனைத்து பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், அதனை அமைக்கக் கோரியும் தமிழகம் முழுவதும் இன்று எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் கடையடைப்பு மற்றும் பேருந்துகள் நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. 

அதன்படி, இன்று தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான பேருந்துகள் இயங்காமல் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் கர்நாடகத்திற்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. 

கோவையைப் பொறுத்தவரையில், கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு 12 பேருந்துகளும், மைசூருக்கு 40 பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் நிலவும் இந்த சூழ்நிலை காரணமாக, கோவையிலிருந்து கர்நாடக மாநிலத்திற்கு இயக்கப்பட்டு வந்த 52 பேருந்துகளும் பாதுகாப்பு கருதி நிறுத்தப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக கார்நாடகா செல்லும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...