சிறப்பு வகுப்பிற்கு சென்ற தனியார் பள்ளியின் 10-ம் வகுப்பு மாணவன் மர்ம மரணம்

திருப்பூர் : திருப்பூரில் அரசு விதிமுறைகளை மீறி தனியார் மெட்ரிக் பள்ளியால் நடத்தப்பட்ட சிறப்பு வகுப்பிற்கு சென்ற 10-வகுப்பு மாணவன் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

திருப்பூர் : திருப்பூரில் அரசு விதிமுறைகளை மீறி தனியார் மெட்ரிக் பள்ளியால் நடத்தப்பட்ட சிறப்பு வகுப்பிற்கு சென்ற 10-வகுப்பு மாணவன் மர்மமான முறையில் உயிரிழந்தார். 

செட்டிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் ராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில் அகிலன் என்ற மாணவன் 10-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது, பொதுத்தேர்வு நடந்து வரும் நிலையில், அகிலன் உள்ளிட்ட சில மாணவர்களுக்கு அரசு விதிமுறைகளை மீறி நேற்று பள்ளியில் சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. அப்போது, நேற்று மாலை ஐந்து மணியளவில் மாணவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகக் கூறி பள்ளியில் இருந்து மாணவனின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

இதனையடுத்து, பள்ளிக்கு விரைந்து சென்ற பெற்றோர்கள் மாணவனை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மாணவன் அகிலன் இன்று அதிகாலை உயிரிழந்தார். 

இது தொடர்பாக உயிரிழந்த மாணவனின் உறவினர்கள் கூறியதாவது :- பள்ளிக்கு செல்லும் பொழுது உடல்நிலை நன்றாக இருந்தது. பள்ளியில் நிகழ்ந்த ஏதோ ஒரு சம்பவத்தின் காரணமாக மாணவன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளான். இவ்வாறு கூறினார். மேலும், கடந்த 10 நாட்களுக்கு முன் பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் அகிலனை மட்டும் அடித்துள்ளதாகவும் அவர்கள் புகார் தெரிவித்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...