திருப்பூர் : திருப்பூரில் மூன்று நாட்கள் நடைபெறும் பின்னலாடை தொழில்நுட்ப கண்காட்சி வரும் 6-ம் தேதி தொடங்க இருக்கிறது.

திருப்பூர் - அவிநாசி சாலை பழங்கறையில் உள்ள ஐ.கே. எஃப் வளாகத்தில், 'நிட் எக்ஸ்பிரஸ் 2018' என்ற பின்னலாடை டெக்ஸ்டைல் தொழில்நுட்ப கண்காட்சி வரும் 6-ம் தேதி முதல் 8-ந் தேதி வரை நடக்கிறது. இந்தக் கண்காட்சியானது, காலை 7 மணி முதல் மாலை 7 வரை நடைபெறுகிறது.
இது குறித்து கண்காட்சியின் நிர்வாக இயக்குநர் முத்துக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில்," நிட் எக்ஸ்பிரஸின் முதல் கண்காட்சியாகவும், இந்த ஆண்டின் முதல் கண்காட்சியாக இந்தப் பின்னலாடை தொழில்நுட்ப கண்காட்சி நடைபெறுகிறது. சீனா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழில்துறையினர் கலந்து கொள்வதோடு, அந்நாடுகளில் தயாரிக்கப்படும் இயந்திரங்களும் இந்தக் கண்காட்சியில் இடம்பெறுகின்றன. அதே போல, பின்னலாடை துறைக்கு தேவைப்படும் கெமிக்கல், டைஸ், லேஸ் உள்ளிட்ட பல்வேறு துறைச் சார்ந்த நிறுவனங்களும் இக்கண்காட்சியில் அரங்குகள் அமைத்து, தங்களின் தயாரிப்புகளை பார்வைக்கு வைக்க உள்ளனர்," இவ்வாறு கூறினார்.