கோவை : வால்பாறையில் உள்ள சோலையார் அணையின் நீர்மட்டம் வீழ்ச்சியடைந்து வருவதால் நீர்ப்பிடிப்பு பகுதிகள் வறட்சியடைந்து மணல் மேடுகளாக காட்சியளிக்கிறது.

வால்பாறை பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த வெயிலின் காரணமாக முக்கிய நீர் நிலைகளான சோலையார் அணை, கூழாங்கல் ஆறு போன்ற நீர் நிலைகளில் தண்ணீர் குறைவாக காணப்படுகிறது. குறிப்பாக சோலையார் அணையில் தண்ணீர் வெகுவாக குறைந்து ஒரு சிறிய குட்டை போல காட்சியளிக்கிறது.

சோலையார் அணையின் சுற்றுவட்டார நீர் நிலைப்பகுதியான உருளிக்கல் பெரியார் நகர் பகுதி தற்போது மண் திட்டுகளாக காட்சியளிக்கிறது. சோலையார் அணை தனது முழு கொள்ளளவான 160 அடியிலிருந்து தற்போது 12 அடியாக காணப்படுகிறது. அணைக்கு நீர்வரத்து 53.36 கன அடியாக உள்ளது.
கடந்த ஒரு வார காலமாக வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் மாலை நேரங்களில் லேசான மழை பெய்து வருவதால் சற்று வெப்பம் குறைந்துள்ளது.