கோவை :கோவையில் உள்ள ஐ.டி.சி. வெல்கம்ஓட்டல், இந்தியன் கிரீன் பில்டிங் கவுன்சிலின் பிளாட்டினம் தரநிலையைப் பெற்றுள்ளது.
கோவை : கோவையில் உள்ள ஐ.டி.சி. வெல்கம்ஓட்டல், இந்தியன் கிரீன் பில்டிங் கவுன்சிலின் பிளாட்டினம் தரநிலையைப் பெற்றுள்ளது.
நாடு முழுவதும் உள்ள பிரபல ஓட்டல்கள், அதன் கட்டுமானம், அமைப்பு, புதிய தயாரிப்புகள், மற்றும் சுற்றுச்சூழல் வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் இந்தியன் கிரீன் பில்டிங் கவுன்சில் தரநிலையை வழங்கி வருகிறது. சில்வர் என்ற அடிப்படை தரநிலை முதல் பிளாட்டினம் என்ற உயர்நிலை தரநிலை வரை ஓட்டல்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த நிலையில், கோவை ரேஸ் கோர்சில் உள்ள பிரபல ஐ.டி.சி. வெல்கம்ஓட்டலுக்கு பிளாட்டினம் தரநிலை வழங்கப்பட்டுள்ளது. சிறந்த சுற்றுச்சூழல் வடிவமைப்பு மற்றும் லீடர்சிப் இன் எனர்ஜி ஆகியவற்றின் அடிப்படையில் இந்த தரநிலை அளிக்கப்பட்டுள்ளதாக இந்தியன் கிரீன் பில்டிங் கவுன்சில் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்த ஓட்டலானது, கோவையில் பிளாட்டினம் தரவரிசையைப் பெற்ற முதல் ஓட்டல் என்பது குறிப்பிடத்தக்கது.