அனைத்து வகுப்புகளுக்கும் 2 ஆண்டிற்குள் புதிய பாடத்திட்டம் : பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

கோவை: இரண்டு ஆண்டிற்குள் அனைத்து வகுப்புகளுக்கும் மாற்றி அமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டங்கள் கொண்டு வரப்படும் எனக் கோவையில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


கோவை: இரண்டு ஆண்டிற்குள் அனைத்து வகுப்புகளுக்கும் மாற்றி அமைக்கப்பட்ட புதிய பாடத்திட்டங்கள் கொண்டு வரப்படும் எனக் கோவையில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் ஸ்டெம் எனப்படும் வெளிநாட்டு நிறுவனம் மற்றும் அக்கல்லூரி இணைந்து நடத்தும் பள்ளி ஆசிரியர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி பட்டறையை இன்று அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி. வேலுமணி ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், "செயல்வழி கற்றல் மூலம் அறிவியல், கணிதம் மற்றும் பொறியியல் பாடங்களை எளிதில் கற்றுக்கொள்வது குறித்து நடத்தப்படும். இந்தப் பயிற்சி பட்டறையில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் கலந்துகொண்டுள்ளனர். இவை, போட்டி தேர்வுகளை மாணவர்கள் எதிர்கொள்ள மிகவும் உதவிகரமாக இருக்கும்," எனத் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது :- ஏழைகள் இல்லாத தமிழகத்தை உருவாக்க கல்வியால் மட்டுமே முடியும். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதம் தர வேண்டும். 1, 6 ,9 மற்றும் 11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதேபோல, மூன்று ஆண்டுகளுக்குள் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், 2 ஆண்டுகளில் அதற்கான பணிகள் முடிவடையும். 12ஆம் வகுப்பு முடித்தவுடன், வேலைபெறும் வகையில் தரமான புதிய பாடத்திட்டம் அமையும். மேலும், இந்தாண்டு தனியார் பள்ளி சீருடைக்கு இணையாக அரசு பள்ளி மாணவர்களுக்கும் சீருடை வழங்கப்படும். 

கோவையில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தக் கல்லூரியில் தங்கி நீட் தேர்வு பயிற்சி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வரும் அனைத்து தேர்வுகளையும், மாணவர்கள் எதிர்கொள்ளும் நிலையை உருவாக்க வேண்டும். என்றார். 

நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "முறைகேடு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான விரிவுரையாளர்கள் தேர்வுக்கான கலந்தாய்வு விரைவில் நடத்தப்படும். மேலும், பகுதிநேர ஆசிரியர்கள் இடமாறுதல்களுக்கான கலந்தாய்வும் இந்தாண்டு நடத்தப்படும்," என உறுதியளித்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...