மத்திய அரசைக் கண்டித்து கோவையில் வழக்கறிஞர்கள் சாலை மறியல்

கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து கோவையில் வழக்கறிஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து கோவையில் வழக்கறிஞர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வலியுறுத்தும் வகையில், வழக்கறிஞர்கள் இன்று காலை கோவை மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து ஆட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாகச் சென்றனர். அப்போது திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பின்னர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும் கோசங்களை எழுப்பியவாறே நீதிமன்றத்திற்குத் திரும்பி சென்றனர்.



அப்போது நீதிமன்ற வளாகத்தின் வாயில் பகுதியில் இந்தியன் ஓவர் சீஸ் வங்கியின் பேனரில் இருந்த இந்தி வார்த்தையை கிழித்து எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பட்டது.  

புறக்கணிப்பு 

இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், மீத்தேன், நியூட்ரினோ மற்றும் ஸ்டெர்லைட் ஆகிய திட்டங்களை எதிர்த்து வரும் 7-ம் தேதி நீதிமன்ற புறக்கணிப்பு செய்ய வழக்கறிஞர்கள் பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...