கோவைக்கு இரண்டு புதிய கும்கி யானைகள் வருகை

கோவை: கோவைக்கு சேரன், ஜான் என்ற இரண்டு கும்கி யானைகள் அழைத்து வரப்பட்டுள்ளன.


கோவை: கோவைக்கு சேரன், ஜான் என்ற இரண்டு கும்கி யானைகள் அழைத்து வரப்பட்டுள்ளன. 

காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் நேரத்தில் அவற்றை விரட்ட சுஜய் (45) மற்றும் பாரி (37) என்ற இரண்டு கும்கி யானைகள் கடந்த 2012-ம் ஆண்டு கோவைக்கு அழைத்து வரப்பட்டன. அவை சாடிவயல் யானைகள் முகாமில் வைக்கப்பட்டிருந்தன. 



இந்த நிலையில், யானைகளின் பணிக்காலம் முடிந்து ஆனைமலை அடுத்த வரகலியாருக்கு பாரியும், முதுமலையை அடுத்த தேக்கம்பட்டிக்கு சுஜயும் அனுப்பப்பட்டன. அவற்றிற்கு பதிலாக சேரன் (32) மற்றும் ஜான் (27) என்ற இரண்டு கும்கி யானைகள் முதுமலையில் இருந்து நேற்று கோவைக்கு அழைத்து வரப்பட்டன. 

இது குறித்து மண்டல வன பாதுகாவலர் ராமசுப்ரமணியம் கூறுகையில், " சுஜய் மற்றும் சேரன் என்ற இரண்டு யானைகள் கூடலூரில் வன விலங்குகள் மற்றும் மனித மோதல்களைத் தடுக்க பயன்படுத்தப்பட்டு வந்தன. தற்போது அவை இரண்டும் திருப்பி அனுப்பப்பட்டு புதிய கும்கி யானைகள் அழைத்து வரப்பட்டுள்ளன." என்றார். 



தற்போது கோவை வந்துள்ள இரண்டு புதிய கும்கிகளின் நினைவாக இரண்டு ஆலமர கன்றுகளை வனத்துறை மருத்துவர் மனோகர் நடவு செய்தார். அந்த யானைகளுக்கு தர்பூசணி, பாலப்பழம், வைக்கோல் போன்ற உணவுகள் வழங்கப்பட்டன. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...