திருப்பூர் : திருப்பூரில் கடந்த தேர்தலின் போது வாக்குச்சாவடி நிலை அலுவலர் பணிசெய்தவர்களுக்கு இதுவரை மதிப்பு ஊதியம் வழங்கப்படாததைக் கண்டித்து திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் அரசு ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த தேர்தலின் போது திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு 230 பேர் வாக்குச்சாவடி நிலை அலுவலராகப் பணி அமர்த்தப்பட்டனர். நிலை அலுவலராகப் பணி அமர்த்தப்பட்டவர்களுக்கு 7 ஆயிரத்து 150 மதிப்பு ஊதியம் வழங்கப்படும் என்றும் தேர்தல் பணி செய்ய வேண்டும் என்றும் கூறியதை தொடர்ந்து அரசுப் பள்ளியை சேர்ந்த ஆசிரியர்கள் பணியாற்றி உள்ளனர்.
இந்நிலையில், பணியாற்றிய 230 பேர்களில் 211 பேருக்கு மட்டும் அவர்களது சொந்த வங்கிக்கணக்குகளில் பணத்தை செலுத்திவிட்டு மீதமுள்ள 19 பேருக்கு இதுவரை ஊதிய பணத்தை தராமலும் 19 பேர்களின் பணத்தை அதிகாரிகள் கையாடல் செய்ததாக கூறி, தேர்தல் பணியாற்றிய 19 பேர் திருப்பூர் மாநகராட்சியில் உள்ள தேர்தல் பிரிவு தாசில்தார் ராமலக்ஷ்மணனின் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், பணியாற்றிய ஆசிரியர்கள் கூறுகையில், "19 பேரின் பணத்தை அதிகாரிகள் கையாடல் செய்து விட்டதாகவும், அதிகாரிகளை வந்து கேட்டால் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறுவதாகவும் தங்களுக்கு சேரவேண்டிய தொகையை பெறாமல் வெளியில் செல்லமாட்டோம்", என்று கூறினர். ஆசிரியர்கள் திடீர் காத்திருப்பு போராட்டத்தினால் மாநகராட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.