அன்னூர் அருகே அரிசிக்கடையில் நகை மற்றும் ரொக்கம் கொள்ளை

கோவை : கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள அரிசிக்கடையில் 4 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கத்தை மர்ம நபர் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை : கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள அரிசிக்கடையில் 4 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கத்தை மர்ம நபர் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 



மேட்டுப்பாளையத்தை அடுத்த அன்னூர் காவல்நிலையம் எதிரே விஜியகுமார் என்பவர் விஜியலட்சுமி என்ற பெயரில் அரிசி கடையை நடத்தி வருகிறார். இவர், நேற்று இரவு வழக்கம்போல, தனது வேலைகளை முடித்து விட்டு கடையை பூட்டி விட்டுச் சென்றுள்ளார். இந்நிலையில், நள்ளிரவு ஒரு மணியளவில் கடையின் பூட்டை கடப்பாறையால் உடைத்து மர்ம நபர் உள்ளே நுழைந்துள்ளான். அங்கு, அரிசி கடையின் கள்ளாவில் வைத்திருந்த ரூ. 1 லட்சம் ரொக்கம் மற்றும் அதில் வைக்கப்பட்டிருந்த சுமார் நான்கு சவரன் தங்கநகை ஆகியவற்றைக் கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்றான்.

பின்னர், மீண்டும் சிறிது நேரத்திற்குப் பிறகு, கொள்ளை நடைபெற்ற இடத்திற்கு வந்த அந்த மர்ம நபர், தடயங்களை ஏதேனும் விட்டு சென்றுள்ளானா என தேடி பார்த்து விட்டு மீண்டும் கடையை விட்டு சென்றான். இந்த நிகழ்வுகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. பின்னர், காலையில் கடையை திறந்த உரிமையாளர் இந்த திருட்டு சம்பவம் குறித்து அதிர்ச்சியடைந்த விஜியகுமார், அன்னூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

அன்னூர் காவல்நிலையத்தில் போதிய காவலர்கள் பற்றாக்குறையைப் பயன்படுத்தி, போலீசாருக்கு சவால் விடும் வகையில் இதுபோன்ற தொடர் திருட்டு சம்பவங்களை கொள்ளையர்கள் மிகவும் துணிவுடன் செய்து வருகின்றனர். எனவே, மாவட்ட போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து கொள்ளை சம்பவத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...