திருச்சியில் நாளை நடக்கும் கமலின் பொதுக்கூட்டத்திற்கு தடையில்லை

திருச்சி : திருச்சியில் இன்று முதல் 10-ஆம் தேதி வரை கூட்டங்கள், பேரணிகளுக்குத் தடை விதிக்கப்பட்ட நிலையில், கமலின் பொதுக்கூட்டத்திற்கு தடையில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி : திருச்சியில் இன்று முதல் 10-ஆம் தேதி வரை கூட்டங்கள், பேரணிகளுக்குத் தடை விதிக்கப்பட்ட நிலையில், கமலின் பொதுக்கூட்டத்திற்கு தடையில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் நாளை நடைபெற இருந்த திருச்சி பொன்னமலையில் மாபெரும் பொதுக்கூட்டத்தில் அதன் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்க இருந்தார். இதற்காக, அவர் இன்று காலை சென்னை எழும்பூரிலிருந்து ரயில் மூலம் திருச்சிக்கு புறப்பட்டார். காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துவது குறித்த முக்கியமான அறிவிப்பை திருச்சி பொதுக்கூட்டத்தில் கமல் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், திருச்சியில் இன்று முதல் 10-ஆம் தேதி வரை எந்தவிதமான கூட்டங்கள், பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை விதித்து திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார். 

இந்த உத்தரவால், நாளை நடைபெற இருந்த மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டம் நடக்குமா..? என சந்தேகம் எழுந்தது. ஆனால், ஏற்கனவே அனுமதி பெறப்பட்டதால், கமல்ஹாசனின் கூட்டத்திற்கு தடையில்லை என போலீஸ் ஆணையர் கூறியுள்ளார். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...