ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க 3 மாத அவகாசம் கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.

காவிரி மேலாண்மை வாரியத்தை ஆறு வாரத்திற்குள் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மத்திய அரசு பின்பற்றவில்லை. இதனால், மத்திய அரசு மீது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, உச்சநீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்து உள்ளது. இதனிடையே, உச்சநீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ள 'ஸ்கீம்' என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மூன்று மாதம் அவகாசம் கோரியும் மத்திய அரசும் மனுத்தாக்கல் செய்துள்ளது. இதனை ஏற்கக்கூடாது என தமிழக அரசு தனது மனுவில் கூறியிருந்தது.
ஆனால், இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், தமிழக அரசு தாக்கல் செய்த மனுவுடன் சேர்த்து 9-ம் தேதி விசாரணை நடத்தப்படும் எனக்கூறியுள்ளது.