கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து கோவை மாவட்ட மருந்து வணிகர்கள் நடத்தும் கடையடைப்பில் மாவட்டத்தில் உள்ள 3000 மருந்துக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கோரி வணிகர்கள் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு ஆதரவாக மருந்து வணிகர்களும் இன்று முழுவதுமாக கடைகளை மூடி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
அதன்படி, காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மருந்துக் கடைகள் மூடப்பட்டிருக்கும். இதில் கோவை மாவட்டம் முழுவதும் உள்ள 2500 சில்லறை மருந்துக் கடைகள், 500 மொத்த வியாபார மருந்துக் கடைகள் இந்த கடையடைப்பில் முழுமையாக ஈடுபட்டுள்ளன.
இது குறித்து கோவை மாவட்ட மருந்து வணிகர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு கூறுகையில், "காவிரி வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து மருந்துக் கடைகளையும் மூடியுள்ளோம்.
பொது மக்களின் அவசர உதவிக்காக மருத்துவமனையில் உள்ள மருந்து கடைகள் வழக்கம் போல் இயங்கும். அதேபோல அனைத்துப் பகுதிகளிலும் ட்ரக் இன்ஸ்பெக்டரிடம் எங்கள் தொலைபேசி எண்ணைக் கொடுத்துள்ளோம். அவசர உதவிக்கு பயன்படுத்தி கொள்ளலாம். நாங்கள் எந்த அரசியல் பந்த்க்கும் கடையடைப்பது கிடையாது. ஆனால் இது நம் மண்ணின் வாழ்வாதார பிரச்சனை . ஆகவே எங்களின் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளோம். காவிரி விவகாரத்தில் நல்ல தீர்வு வரும் என எதிர்பார்க்கிறோம்." என்றார்.