காவிரிக்காக பதவியை ராஜினாமா செய்தார் அ.தி.மு.க., எம்.பி..!

டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு காலம் தாழ்த்துவது மன வேதனை அளிப்பதாகக் கூறி அ.தி.மு.க.-வை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் முத்துக்கருப்பன் அவரது பதவியை ராஜினாமா செய்தார்.

டெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு காலம் தாழ்த்துவது மன வேதனை அளிப்பதாகக் கூறி அ.தி.மு.க.-வை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் முத்துக்கருப்பன் அவரது பதவியை ராஜினாமா செய்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த அவகாசம் கடந்த 29-ம் தேதியுடன் முடிவடைந்தது. ஆனால், பல்வேறு காரணங்களை கூறி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது. 

இது தமிழக விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் அ.தி.மு.க. ராஜ்யசபா எம்.பி.,யான முத்துக்கருப்பன் தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக கடந்த 30-ம் தேதி டெல்லியில் அறிவித்தார். அதன்படி, தனது ராஜினாமா கடிதத்தை இன்று மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவிடம் அளித்தார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கடுமையான சட்ட போராட்டங்களுக்குப் பிறகு தீர்ப்பு கிடைத்த பிறகும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தாமதப்படுத்துகின்றனர். தமிழகத்துக்கு தண்ணீர் கொடுப்பதில் செய்யப்படும் அநீதியை மனம் ஏற்கவில்லை. 

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு தொடர்ந்து காலம் தாழ்த்துவது மனவேதனை அளிக்கிறது. முதலமைச்சர், துணை முதலமைச்சர் சமாதானம் செய்வார்கள் என்று எண்ணி எனது தொலைபேசியை அணைத்து வைத்து விட்டேன். எனது ராஜினாமா கடிதத்தை துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடுவிடம் அளித்துவிட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

காவிரிக்காக தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், ஆளும் கட்சியை சேர்ந்த எம்.பி., ராஜினாமா செய்தது அக்கட்சியினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.





Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...