உதகையில் சுற்றுலா பயணியின் கார் மீது மரம் விழுந்து விபத்து

நீலகிரி: உதகைக்கு சுற்றுலா வந்த பயணிகளின் கார் மீது பழமையான மரம் விழுந்த விபத்தில் கார் ஓட்டுநர் படுகாயமடைந்தார்.

நீலகிரி: உதகைக்கு சுற்றுலா வந்த பயணிகளின் கார் மீது பழமையான மரம் விழுந்த விபத்தில் கார் ஓட்டுநர் படுகாயமடைந்தார். 

நீலகிரி மாவட்டம் உதகை பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு பகுதிகளுக்கும், பல்வேறு மாநிலங்களுக்கும் நாள்தோறும் பேருந்துகள் வந்து செல்கின்றன. கேரளா, கர்நாடகா வாகனங்கள் உதகை தலைகுந்தா தேசிய நெடுஞ்சாலை வழியாக நாள்தோறும் 100-க் கணக்கான வாகனங்கள் உதகையை வந்தடைகின்றன.

இந்நிலையில் கேரளாவிலிருந்து தலைகுந்தா, பாரதியார் நகர் பகுதியில் கேரளா மாநில கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த கார் மீது அங்கிருந்த பழமையான மரம் ஒன்று விழுந்தது. இந்த விபத்தில் வாகன ஓட்டுநர் படுகாயங்களுடன் உயிர் தப்பினார். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.



மேலும், மரம் மின் கம்பி மீது விழுந்ததால் மின்சாரம் துண்டிப்பு ஏற்பட்டது. இனி வரும் மழைக் காலங்களுக்குள் சாலையோரம் விழும் நிலையில் உள்ள ஆபத்தான மரங்களை அகற்றினால் மட்டுமே பாதுகாப்பான பயணம் செய்ய முடியும் என்பதே வாகன ஓட்டிகளின் வேண்டுகோளாக உள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...