கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோவையில் தி.மு.க.வினர் இருவர் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி கோவையில் தி.மு.க.வினர் இருவர் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக, தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று போராட்டம் நடைபெற்றது. அப்போது ஸ்டாலின் உட்பட தி.மு.க. தொண்டர்களை போலீசார் கைது செய்தனர்.
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் நேற்று தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவையைப் பொறுத்தவரையில் பீளமேடு, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், இன்று காலை பீளமேடு பகுதியில் எம்.எல்.ஏ. கார்த்திக் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில், பீளமேடு பகுதியில் தி.மு.க.வினா் 2 போ் தீக்குளிக்க முயற்சி செய்தனர். மத்திய அரசைக் கண்டித்து தி.மு.க. வட்ட கழக செயலாளர் முருகேசன் மற்றும் சிங்கை சதாசிவம் இருவரும் தற்கொலை முயற்சி செய்தனர். தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து, தி.மு.க. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி தலைமையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து வ.உ.சி. மைதானம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
