இன்று உதகை மற்றும் அதன் சுற்று வட்டார கிராமபுற பகுதிகளான கடநாடு, தாவெனெ, உல்லத்தி, கவரட்டி, அணிக்கொரை, தூனேரி, கெந்தோரை போன்ற பல்வேறு இடங்களில் (ஐஸ் கட்டி) ஆலங்கட்டி மழை பெய்தது.
நீலகிரி: ஊட்டியில் இன்று ஐஸ் கட்டி மழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
நீலகிரி மாவட்டம் உதகையில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்து இதமான காலநிலை நிலவி வருகிறது.
சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்திருக்கும் இந்த கோடை சீசனில் உதகையில் நிலவி வரும் கால நிலையால் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று உதகை மற்றும் அதன் சுற்று வட்டார கிராமபுற பகுதிகளான கடநாடு, தாவெனெ, உல்லத்தி, கவரட்டி, அணிக்கொரை, தூனேரி, கெந்தோரை போன்ற பல்வேறு இடங்களில் (ஐஸ் கட்டி) ஆலங்கட்டி மழை பெய்தது.

மேலும், குன்னுார் மற்றும் கோத்தகிரியிலும் இந்த ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால், சாலைகளில் ஐஸ் கட்டிகள் பரவி கிடந்தன. பச்சை புல்வெளிகளில் விழுந்த ஐஸ் கட்டிகள் வெண்மை நிறமாக ஜொலித்த காட்சி காண்போரின் கண்களை கவர்ந்தது.