பா.ஜ.க. அரசு ஆன்மீக அரசியலையோ, தேசிய அரசியலையோ நடத்தவில்லை : அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

திருப்பூர் : மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு ஆன்மீக அரசியலையோ அல்லது தேசிய அரசியலையோ நடத்தவில்லை என்று இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் குற்றம்சாட்டியுள்ளார்.


திருப்பூர் : மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு ஆன்மீக அரசியலையோ அல்லது தேசிய அரசியலையோ நடத்தவில்லை என்று இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் குற்றம்சாட்டியுள்ளார். 

இந்து மக்கள் கட்சி சார்பில் மாநில இணைய தாழ் ஒருங்கிணைப்புக் குழுவின் ஆலோசனை கூட்டம் திருப்பூர் ஈஸ்வரன் கோவில் எதிரில் உள்ள சங்கமம் ஹோட்டலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைமை தாங்கிய அக்கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார். 



அப்போது அவர் பேசுகையில், "காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசும், கர்நாடக அரசும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதித்துவிட்டது. எனவே தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும். மேலும், மத்திய அரசு ஆன்மீக அரசியலையும் நடத்தவில்லை, தேசிய அரசியலையும் நடத்தவில்லை. ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். 234 தொகுதிகளிலும் ரஜினி வெற்றி பெறுவார். ஆன்மீக அரசியல் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வரும் சித்திரை மாதம் அனைத்து மாவட்டங்களிலும் ராம்ராஜ்ய ரத யாத்திரை நடத்தப்படும். 

மேலும், நியூட்ரினோ மற்றும், ஸ்டெர்லைட் விவகாரத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஆதரித்துக் கூறிய கருத்தை தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் மாற்றிக் கூறிவருகின்றார்." என்றார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...