திருப்பூர் : மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு ஆன்மீக அரசியலையோ அல்லது தேசிய அரசியலையோ நடத்தவில்லை என்று இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் குற்றம்சாட்டியுள்ளார்.
திருப்பூர் : மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு ஆன்மீக அரசியலையோ அல்லது தேசிய அரசியலையோ நடத்தவில்லை என்று இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்து மக்கள் கட்சி சார்பில் மாநில இணைய தாழ் ஒருங்கிணைப்புக் குழுவின் ஆலோசனை கூட்டம் திருப்பூர் ஈஸ்வரன் கோவில் எதிரில் உள்ள சங்கமம் ஹோட்டலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைமை தாங்கிய அக்கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், "காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசும், கர்நாடக அரசும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதித்துவிட்டது. எனவே தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும். மேலும், மத்திய அரசு ஆன்மீக அரசியலையும் நடத்தவில்லை, தேசிய அரசியலையும் நடத்தவில்லை. ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். 234 தொகுதிகளிலும் ரஜினி வெற்றி பெறுவார். ஆன்மீக அரசியல் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வரும் சித்திரை மாதம் அனைத்து மாவட்டங்களிலும் ராம்ராஜ்ய ரத யாத்திரை நடத்தப்படும்.
மேலும், நியூட்ரினோ மற்றும், ஸ்டெர்லைட் விவகாரத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஆதரித்துக் கூறிய கருத்தை தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் மாற்றிக் கூறிவருகின்றார்." என்றார்.