கோவை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி இன்று சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மேட்டுப்பாளையத்தில் தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு காலம் தாழ்த்தி வரும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் மற்றம் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெற்றது. அப்போது ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்.

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு தி.மு.க.வை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் போது, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும், அரசியல் நோக்கத்தில் தொடர்ந்து தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து வருவதாகக் குற்றம்சாட்டிய அவர்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினரை கைது செய்தனர். இந்த போராட்டத்தால், அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.