கோவையை விட்டு புறப்பட்ட கும்கி யானைகள்

கோவை : காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் நேரத்தில் அவற்றை விரட்ட சுஜய் (45) மற்றும் பாரி (37) என்ற இரண்டு கும்கி யானைகள் கடந்த 2012-ம் ஆண்டு கோவைக்கு அழைத்து வரப்பட்டன. அவை சாடிவயல் யானைகள் முகாமில் வைக்கப்பட்டிருந்தன.

கோவை : காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் நேரத்தில் அவற்றை விரட்ட சுஜய் (45) மற்றும் பாரி (37) என்ற இரண்டு கும்கி யானைகள் கடந்த 2012-ம் ஆண்டு கோவைக்கு அழைத்து வரப்பட்டன. அவை சாடிவயல் யானைகள் முகாமில் வைக்கப்பட்டிருந்தன. 



இந்த நிலையில், யானைகளின் பணிக்காலம் முடிந்து ஆனைமலை அடுத்த வரகலியாருக்கு பாரியும், முதுமலையை அடுத்த தேக்கம்பட்டிக்கு சுஜயும் அனுப்பப்பட்டன. அவற்றிற்கு பதிலாக சேரன் மற்றும் ஜான் என்ற இரண்டு கும்கி யானைகள் முதுமலையில் இருந்து அழைத்து வரப்படுகின்றன.

இது குறித்து வனத்துறை மருத்துவர் மனோகர் கூறுகையில், "பாரி என்ற கும்கி யானை நஞ்சன் என்ற கும்கியுடன் இருந்தது. அவைகள் யானை மனித மோதல்களைக் கட்டுப்படுத்த பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால், நஞ்சன் யானையின் வாய் பகுதியில் காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அது உயிரிழந்தது. தொடர்ந்து சுஜய் கோவைக்கு அழைத்து வரப்பட்டது. மதுக்கரை மகாராஜா என்ற காட்டு யானையைப் பிடிப்பதற்கு அவை இரண்டும் உதவின. தற்போது, புதிதாக சேரன் மற்றும் ஜான் என்ற இரண்டு காட்டு யானைகள் கோவைக்கு வரவுள்ளன. அந்த இரண்டு கும்கிகளும் இன்று கோவையை வந்தடையும்." என்றார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...