பெங்களூரூ விமான நிலையத்திற்கு கோவையில் இருந்து பேருந்து இயக்கம்

கோவை: கோவையில் இருந்து பெங்களூரூ விமான நிலையத்திற்கு பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து முதல் முறையாக இயக்கப்பட்டது.


கோவை: கோவையில் இருந்து பெங்களூரூ விமான நிலையத்திற்கு பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து முதல் முறையாக இயக்கப்பட்டது.

கோவையில் இருந்து பெங்களூரூவிற்கு முதல் முறையாக நவீன வசதிகளுடன் கர்நாடக அரசின் பேருந்து சேவை நேற்று முதல் துவங்கப்பட்டு உள்ளது. இந்தப் பேருந்தில் கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. பேருந்து பயணிகளுக்காக வை-பை வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்தப் பேருந்து கோவையில் இருந்து புறப்பட்டு பெங்களூரூ விமான நிலையத்தை சென்றடைகிறது.



கோவையில் இருந்து மதியம் 12 மணிக்கு புறப்பட்டு, இரவு 8 மணிக்கு பெங்களூரூவை சென்றடைகிறது. இதனையடுத்து, மீண்டும் அதிகாலை 3 மணிக்குப் புறப்படும் பேருந்து காலை 10.45 மணிக்கு கோவை வந்தடைகிறது. இந்தப் பேருந்திற்கு ரூ. 1,100 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தொழில் நகரான கோவையில் பெங்களூரூவிற்கு அதிகளவிலான ரயில்களும் இயக்கப்படாத நிலையில், தற்போது நவீன வசதிகளுடன் பேருந்து சேவை அறிமுகப்படுத்தியிருப்பது வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று உள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...